இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் பண்புகள் இர்பானி மற்றும் அரசியல் பரிமாணங்களை உள்ளடக்கியவை
கலாச்சார குழு: ஆரிப்கள் (மெய்ஞானிகள்) பெரும்பாலும் சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ்பவர்களாக இருப்பதுடன், அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் இர்பான் மற்றும் ஆன்மீகம் என்பவற்றில் சிறந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இவ்விரு துறைகளிலும் மிகச் சிறந்த ஓர் ஆளுமையாக விளங்கினார்.